வல்வை வைத்தியசாலைக்கு வல்வை 73 குடும்பம் 23 இலட்சம் உதவி

0
403 views

 

உலகப் பந்தில் பரந்துவாழும் வல்வெட்டித்துறையில் 1973 ல்பிறந்த வல்வை 73 குடும்பம்ஊர் வைத்துயசாலைக்காக 23 லட்சம் ரூபாய்களை வழங்கியிருக்கிறார்கள்.

வல்வை மக்களுக்கு மட்டுமல்லாது எமைச் சூழவுள்ள கிராமங்களில்உள்ள அத்தனைபேருக்கும் இவ் வைத்தியசாலைதான் ஆதாரவைத்தியசாலையாக உள்ளது. அரச வைத்தியசாலையாகஇருந்தாலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒதுக்கீடுகள் இதுவரைபற்றாக்குறையாகவே இருந்துவந்துள்ளது. அத்துடன் பல அடிப்படைஅத்தியாவசிய தேவைகள் பல நிவர்த்தி செய்ய முடியாதநிலையில்தான் இவ் வைத்தியசாலை தனது சேவையை தொடர்ந்துவழங்கிக் கொண்டு வந்துள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்தின் கூற்றின்படி வைத்தியசாலையில்ஒவ்வொருமாதமும் 10,000 நோயாளிகள் சிகிச்சை பெற்றுச்செல்வதாகவும் ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்கான அடிப்படைதேவையான CCTV என்பது இல்லாமல் இருப்பது ஒர் குறையாகஇருந்துகொண்டே வருகின்றது. இதனால் பல நடைமுறைப்பிரச்சனகளை வைத்தியசாலை நிர்வாகம் எதிர்கொண்டுவருகின்றார்கள்.

வல்வை 73 குடும்பம்’ – வல்வை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டபணவுதவி மூலம் வைத்தியசாலைக்குத் தேவையான அத்தியாவசியமருந்துகளுக்கான உதவியையும் செய்து அவர்களது எதிர்காலபாதுகாப்புக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

சிறு வயதில் தமைக் காத்த வைத்தியசாலை பல பற்றாக்குறையினால் இடர்படும்போது நாம் தானே கரம்கொடுக்கவேண்டும் என்ற கருத்துடன் வழங்கப்பட்ட இவ்வுதவி உலக வாழ் வல்வை மக்களின் பாராட்டைப் பெற்றதில்வியப்பில்லை.

வல்வை 73 குடும்பம் என்றழைக்கப்படும் இந்த நண்பர்களின்இப்பேருதவி வல்வை மக்கள் மட்டுமல்லாது புலம் பெயர்ந்து வாழும்தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்என்பதில் ஐயமில்லை.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here