நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு உள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் முண்டியடிப்பதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு முன்னால் மக்கள் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்ததை அவதானிக்க முடிந்தது.
நீண்டநேரம் மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் எரிவாயுவை கொள்வனவு செய்து சென்றனர். அத்துடன் பலர் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பியும் சென்றுள்ளனர்.