வல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தெரிவு எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்
வல்வெட்டித்துறை நகர சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
முதலில் 5 மாதங்கள் க.செல்வேந்திரா அவர்களும் தொடர்ந்து மற்றைய கட்சிகளுக்கும் தவிசாளர் பதவியை பகிர்ந்தளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என அறியக்கிடைத்துள்ளது. இந்த உடன்படிக்கை வல்வையில் முக்கிய பிரமுகர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துக் கட்சிகளும் இணைந்த இந்த முயற்சிக்கு திரு சிவாஜிலிங்கம் அவர்கள் முழு முயற்சி எடுத்ததாகவும் அறிகின்றோம்.
இந்த ஒற்றுமை மூலம் வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதிகள் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.