இன்று வல்வெட்டித்துறையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக தொற்றாளர்கள் கண்டறியப்படாத நிலையில் இன்று மீண்டும் வல்வையில் கொரோனாவா என்ற கேள்வி எல்லோர் மனங்களிலும் எழுந்துள்ளது.
கொரோனா அலை வந்து எம்மக்களில் பலரை இழந்த சோகம் இன்னும் தீராத நிலையில் மீண்டும் ஒரு அலை வராத நிலை உருவாகாமல் பார்க்க வேண்டிய கடமை வல்வை மக்கள் அனைவருக்கும் உண்டு.
ஆகவே எம்மக்கள் அனைவரும் கோவிட் சுகாதார விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகின்றது.
பொது நிகழ்ச்சிகள், சமய சடங்குகளில் கலந்து கொள்ளும்போதும், அதை நடாத்துபவர்களும் மிகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.