மாவளி கண்பார்

0
445 views

மாவளி கண்பார்
எங்கும் கண்பார்
எங்களையும் கண்பார்

என ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்திலும் தீக்கம்பத்தை சுற்றி சிறுவர்கள் மாவளி பாடி விளையாடுவார்கள்.
தமிழர்கள் வாழ்வோடு கலந்த பாரம்பர்ய விழா கார்த்திகை தீப விழா. இது இன்றும் பொலிவோடும் சிறப்போடும் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சொக்கப்பனை எரித்து, சாம்பலை வயலில் தூவி…. நினைவில் நிற்கும் அந்தக்கால கார்த்திகைத் திருநாள்!

சங்க இலக்கியமான நற்றிணையானது அந்தக் காலத்தில் கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றும் நிகழ்வை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. தமிழர்களின் தொன்மையான பண்டிகைகளில் திருக்கார்த்திகை தீப விழாவும் ஒன்று. ஒளி வடிவில் இறைவனை வணங்கும் பெருவிழாவே கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா. சங்க இலக்கியங்களான நற்றிணை, பரிபாடல், புறநானூறு போன்றவற்றில் பல்வேறு இடங்களில் கார்த்திகைத் தீபத்தன்று மக்கள் விளக்கேற்றி வழிபட்ட காட்சிகள் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட பல்வேறு விழாக்கள் இன்று உருமாறிவிட்டன. அத்தகைய விழாக்களுள் ஒன்றுதான் `கார்த்திகைத் தீபத் திருவிழா’ எனப்படும் கார்த்திகை விளக்கீடு விழா.

ஆண் பனை மரத்திலிருந்து பனங் குலைகளை (காய்ந்தது) பறித்து நன்கு காய வைத்து, தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள். பிறகு அந்த கரியை ஒரு சிறு துணியிலோ அல்லது கோணியிலோ சுற்றி சிறு சிறு உருளையாக்கிக் கொள்வார்கள். பின்பு அதை பனைமட்டையில் வைத்து நீண்ட கயிறுடன் இணைத்து கட்டி விடுவார்கள். பிறகு உருளையின் நடுவே சிறிய நெருப்பு துண்டை வைத்து ஊதி நெருப்பு பொறி வந்தவுடன் சுற்றி விளையாடுவார்கள் !

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here