ஜேர்மனி “” நான்காவது கோவிட் அலையின் பிடியில் உள்ளது வியக்கத்தக்கதாக உள்ளதாக ஐரோப்பிய பிராந்திய தலைவர்களுடனான நெருக்கடி நிலை சந்திப்பிற்கு முன்னதாக அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் கூறியுள்ளார்.
ஜேர்மனியின் தினசரி நோய்த்தொற்றுகள் புதன்கிழமை 52,826 என்ற புதிய ஜெர்மன் சாதனையை எட்டியுள்ளன.
நெதர்லாந்திலும் இப்போது கோவிட் பகுதியான கட்டுப்பாடுகளில் இருந்த போதும் அதிகளவான பதிவு செய்யப்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஆஸ்திரியா திங்களன்று தடுப்பூசி போடப்படாத இரண்டு மில்லியன் மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அத்துடன் மற்றைய ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாடுகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தயாரகின்றன.
ஸ்வீடன் நாடு 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கச்சேரிகள் மற்றும் பிற உட்புற நிகழ்வுகளுக்காக டிசம்பர் 1 முதல் கோவிட் தடுப்பூசி பாஸை அறிமுகப்படுத்துகிறது. “தடுப்பூசி போடாத நீங்கள் சாதாரணமாக தொடர முடியாது; தடுப்பூசி போடுவதே உங்களின் மிக முக்கியமான பங்களிப்பு” என்று சமூக விவகார அமைச்சர் லீனா ஹாலெங்க்ரென் கூறினார்.
பொது நிகழ்வுகள் அல்லது சேவைகளை அணுக தடை விதிக்கப்படும் என்று செக் பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் கூறினார்.
அண்டை நாடான ஸ்லோவாக்கியாவில் புதன்கிழமை 8,342 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன,
இன்று இங்கிலாந்தில் 38,263 புதிய தொற்றுக்களும், 201 இறப்புக்களும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.








