கரப்பந்தாட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தினை பெற்றது வல்வை அணி

0
815 views

பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழாவின் பெருவிளையாட்டுக்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் (15/02/2020) காலை இடம்பெற்ற கரப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் தொண்டமானாறு கலையரசி அணியினை எதிர்த்து வல்வை அணியானது மோதியது.

முதற் செற்றை 25:14 என கலையரசி கைப்பற்ற இரண்டாம் செற்றினை 25:22 என்ற கணக்கில் வல்வை அணியானது கைப்பற்றியது.  வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான மூன்றாம் செற்றில் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் 22:25என்ற செற்கணக்கில் வல்வை அணியானது தோல்வியினை தழுவி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது..
அரையிறுதியாட்த்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு வல்வை அணியானது தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கு!!!!!
மேலும் கடந்தவாரம் இடம்பெற்ற பூப்பாந்த தொடரில் அரையிறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்திடம் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here