கடந்த 3 வருட காலப்பகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸார் பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டமை, இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் தமது ஆணைக்குவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க கூறியுள்ளார்.
இவற்றில் 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








