வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று ஏற்பட்ட விபத்தில் நெடுந்தீவின் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் சிறிய கார் ஒன்று, பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர். இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.










