வடமாகாண மேசைப்பந்தாட்ட தரப்படுத்தலில் 21 வயதுப்பிரிவில் வல்வை மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சிறிகரன்-கனுஜா மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு வடமாகாண தரப்படுத்தல் பட்டியலை யாழ் மாவட்ட மேசைப்பந்தாட்டச் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
இந்தப்பட்டியலில் இம் மாணவி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார். இப் பாடசாலையைச் சேர்ந்த பல மாணவிகள் தகைமைச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளமை குறிப்பிட்த்தக்கது. இம்மாணவிகளுக்கான பயிற்சிகளை இக்கல்லூரியின் ஆசிரியர் சி.ஜெகப்பிரதாபன் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது