மரண அறிவித்தல்
திருமதி மகாலட்சுமி சிவனருட்காந்தி
ஜனனம் 03.01.1946 இறைவனடி 03.03.2015
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகாலட்சுமி சிவனருட்காந்தி அவர்கள் 03.03.2015 செவ்வாய்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற நவசிவாயம்பிள்ளை நவரனத்தினம்மாள் தம்பதிகளின் அன்புமருமகளும், சிவனருட்காந்தி (இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும், சிவமலர் (லண்டன்), நவரத்தினம்மாள் (பவி) (இலங்கை), நவசிவாயம் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
வள்ளிநாயகி (இலங்கை), நித்தியானந்தவேல் (இலங்கை), பாலசுப்பிரமணியம் (பாலி) (லண்டன்), சதானந்தவேல் (அப்பி) (ஜேர்மனி), இராசலட்சுமி (கிளி) (நோர்வே), சண்முகநாதன் (குட்டிப்பாலி) (இலங்கை), நவலட்சுமி (ஆசை) (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இரட்னேஸ்வரன் (பாபு) (லண்டன்), ஆனந்தராஜா (இலங்கை), டினேஸியா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சிவயோகநாயகியின் அண்ணியும், கார்த்தீபனின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
08.03.2015 காலை 10.00 மணிக்கு வல்வை ஊறணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
00447404340024
00442082868905