யாழ். வடமராட்சி திக்கம் சந்திப் பகுதியில் திங்கட்கிழமை (02) அதிகாலை 5.00 மணிக்கு நின்று கொண்டிருந்த டெமோ வாகனத்துடன் மினிபஸ் மேதியதில் ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
திக்கம் நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த மகாலிங்கம் ரவிதாஸ் வயது 42 என்ற 3 பிள்ளைகளின் தந்தையே படுகாயம் அடைந்துள்ளார் என பொலிஸார் கூறினர். இவ் விடையம் தொடர்வாக தெரியவருவதாவது.
கூலர் (டெமோ) வாகனத்தில் மீன் ஏற்றுவதற்காக திக்கம் சந்திக் கடக்கரை வீதி ஓரத்தில் தரித்து நின்ற போது எதிரே வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக வந்த 751 தனியார் மினிவஸ் பின்பக்கமாக இடித்து கடலுக்குள் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
தப்பிச் சென்ற மினி பஸ்சையும் சாரதியையும் உடுப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்ததுடன் விசாரணையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.