சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் சுயதனிமைப்படுத்தலில்

0
628 views

சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18ம் திகதி சிங்கள மொழி மூலம் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கரவெட்டி பிரதேச செயகத்தில் நடைபெற்றது. இதில் பயிற்சி நெறியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்ற அல்வாய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்நிகழ்வில் பங்குபற்றிய 80 இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here