இமையாணன் மேற்கில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இமையாணன் மேற்குப்பகுதீயில் அண்மையில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கொரோனா தொற்றாளர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து அவரோடு தொடர்புபட்ட ஆதியாமலை கோம்பு மற்றும் தூப்புலம் உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 55 பேர் உட்பட 60 பேருக்கு கடந்த திங்கட்கிழமை கரவெட்டிச் சுகாதாரப் பிரிவினரின் ஏற்பாட்டில் கொரோனா தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 50 பேருக்கு தொற்று இல்லை என்றும் 6பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் 4 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.








