வல்வை விளையாட்டுக்கழகம் தனது வைரவிழாவினை முன்னிட்டும்மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் 9 நபர் கொண்டமாபெரும் வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்டபோட்டியொன்றினை நடாத்தி வருகின்றது..
அந்தவகையில் அரையிறுதியாட்டங்கள் 13/06/2022 நடைபெற்றது.
முதலாவது அரையிறுதியாட்டத்தில் கிளிநொச்சி மண்ணின் பலம்வாய்ந்த முன்னணி அணிகளில் ஒன்றான வலைப்பாடு ஜெகமீட்பர்அணியினை எதிர்த்து யாழ்மாவட்டத்தின் பலம் வாய்ந்த முன்னணிஅணிகளில் ஒன்றான கொற்றாவத்தை றேஞ்சஸ்விளையாட்டுக்கழகம் மோதியது.
பெருந்திரளான ரசிகர்கள் மத்தியில இடம்பெற்ற ஆட்டமானது 1:1 என்ற கோல்கணக்கில் சமனிலை அடைந்தது. எனவேவெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலைதவிர்ப்பு உதையில் 7:6 என்ற கோல்கணக்கில் கொற்றாவத்தைறேஞ்சஸ் அணியானது வெற்றியினை வெற்றி வல்வை வைரவிழாஉதைபந்தாட்ட தொடரின் மாபெரும் இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றது. கொற்றாவத்தை றேஞ்சஸ் அணிசார்பாக ஆர்த்திகன்பெறப்பட்ட ஒரு கோலினையும் பெற்றுக்கொடுத்ததோடுவலைப்பாடு ஜெகமீட்பர் அணிசார்பாக பெறப்பட்ட ஒருகோலினையும் ஜெனிஸ்ரன் பெற்றுக்கொடுத்தார்.. போட்டியின்ஆட்டநாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியின்கோல்காப்பாளர் சுகந்தன்தெரிவு செய்யப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றகொற்றாவத்தை றேஞ்சஸ் அணிக்கு எமது வாழ்த்துக்களையும்பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில்சிறப்பாக செயற்பட்ட வலைப்பாடு ஜெகமீட்பர்விளையாட்டு கழகத்திற்கும் வாழ்த்துக்களையும்பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.