பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்

0
519 views

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 12 திகதி ஆரம்பித்து நவம்பர் மாதம் 6 ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இப் பரீட்சைக்காக நாடு முழுவதுமாக 2648 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்பூஜித தெரிவித்துள்ளார்.

இதே வேளை 2020ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஒக்ரோபர் மாதம் 11ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக 2936 பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதிக்குள் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைந்துள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here