கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு

0
533 views

கரவெட்டி பிரதேச செயலகத்தின் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2மணிக்கு இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கரவெட்டி பிரதேச செயலர் இ.தயாரூபன் தலைமையில் இடபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் பா.முகுந்தனும் சிறப்பு விருந்தினராக வடமாகாண உடற்கல்வி உதவிகல்விப் பணிப்பாளர் ஆர்.இராஜசீலனும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இறுதி நாள் நிகழ்வுகளில் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியும், ஆண்களுக்கான கால்ப்பந்தாட்டத்தின் இறுதிப்போட்டியும், ஆண் பெண்களுக்கான 100 மீற்றர், 800 மீற்றர் இறுதிப்போட்டியும் இடம்பெறவுள்ளன. பெண்களுக்கான வலைப்பந்தாட்டத்தின் இறுதிப்போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் வி.கழகத்தை எதிர்த்து வதிரி பொமர்ஸ் வி.கழகமும் கால்ப்பந்தாட்டத்தின் இறுதியாட்டத்தில் இமையாணன் மத்திய வி.கழகத்தை எதிர்த்து நவிண்டில் கலைமதி வி.கழகமும் மோதவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here