மடிக்கணினியை கொள்வனவு செய்ய தேவையான கடன் வசதி

0
744 views

பல்கலைக்கழகங்களில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக் கணினியை கொள்வனவு செய்ய தேவையான கடன் வசதியை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு இலட்சம் ரூபாய் சலுகை கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது.

இந்தக் கடன் வசதிகள் அரச வங்கிகளுடன் இணைந்து பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இக்கடனை பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின் மீளச்செலுத்த முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here