மின் தடை தொடர வாய்ப்பு

0
505 views

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதால் மேலும் மின்வெட்டு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இலங்கை மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் சுலக்ஷனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலற்றதாகிவிட்டது.

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையம் தேசிய மின்சார கட்டமைப்புக்கு அதிக அளவு மின்சாரத்தை வழங்குகிறது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் 810 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்சார கட்டமைப்புக்கு வழங்குகின்றது.

2500 முதல் 2600 மெகாவாட் வரை மின்சாரம் முழு நாட்டிற்கும் தினசரி தேவைப்படுகிறது.

மின் தேவையை சமன் செய்வதற்காக சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here