பிரித்தானியாவில் தமிழர் ஒருவரின் வீட்டில் நிகழ்ந்த கொண்டாட்டம் – 1000 பவுண்ஸ் அபராதம்

0
920 views

பிரித்தானியாவில் குறைடன் பகுதியில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தினர் பிறந்த தமது குழந்தையின் 31ம் நாள் நிகழ்வை கொண்டாடியுள்ளனர். இதன் போது 35இற்கும் மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். மக்கள் கூடியதை அவதானித்த அயல்வீட்டார் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் அனைவரையும் சுற்றி வளைத்துள்ளனர்.
கொரோனா நோய் நிலைமையில் அத்துமீறி சட்டவிரோதமாகவும், சமூக இடைவெளியைப் பேணாது இருந்தமைக்காகவும் ஒவ்வொருவருக்கும் தலா 1000 பவுண்ட்ஸ் அபராதம் விதித்தனர்.  இத்தொகை இலங்கை ரூபாயில் இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள் ஆகும்.

பதினான்கு நாட்களுக்குள் அபராதம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இது இரட்டிப்பாக்கப்படும் என்றும் அதையும் மீறினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here