பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்தில் 120 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 80 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

0
335 views

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்றிரவு ஏழு இடங்களில் இடம்பெற்ற தாக்குதலில்இ 120 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 80 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தாம் தாக்குதல் நடத்தியதாக ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.
இந்த நிலையில் பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என்றும்இ எனினும் அங்குள்ள சிறிலங்கா தூதரகம் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சிறிலங்கா வௌிவிவகார அமைச்சு ருவிட்டரில் பதிவிட்டுள்ளது.
இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரான்ஸில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதற்கு 0033789238926 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதல் தொடர்பில் பராக் ஒபாமா மற்றும் மோடி கண்டனம் தெரிவித்துள்ளனர்.


.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here