நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட் மக்களுக்கு வல்வெட்டித்துறையில் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ள உதவி விபரங்கள்

0
945 views

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட் மக்களுக்கு சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதான குருக்கள் திரு.தண்டாயுதபாணிதேசிகர் அவர்களின் புத்திரர் திரு. மாதவன் அவர்களால்

2.4.2020 வியாழக்கிழமை

வல்வை அம்மன் கோவிலடியில் இருந்து சந்தி வரை கே.கே.எஸ் வீதியிலும் கே.கே.எஸ் வீதியில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் எல்லா ஒழுங்கைகளிலும் மற்றும் சிவகுருவில் இருந்து சந்தி ஒழுங்கை வரை கடற்கரை வீதி வரை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு உணவு வழங்கப்படவுள்ளது.

(மணி அப்பா வீட்டு ஒழுங்கை, உதயசூரியன் வீதி, சிவகுரு வீதி, குண்டுவர் காடு ஒழுங்கை, சின்ன சோடா கடை ஒழுங்கை சீவரெத்தினம் கடை ஒழுங்கை, மீனாட்சி அம்மன் கோவிலடி ஒழுங்கை, கறிக்கடை ஒழுங்கை, சந்தி ஒழுங்கை)

3.04.2020 வெள்ளிக்கிழமை

வல்வை அம்மன் கோவிலடியில் இருந்து சந்தி வரை உள்ள கே.கே.எஸ் வீதியில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் எல்லா ஒழுங்கைகளிலும் மற்றும் ஆலடி ஒழுங்கை, பூச்சி புத்தான் வரை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு உணவு வழங்கப்படவுள்ளது.

(காளி கோவில் ஒழுங்கை, அட்வகேட் லேன், ஆலடி ஒழுங்கை)

4.04.2020 சனிக்கிழமை

தீருவில் மற்றும் தூபியடி பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு உணவு வழங்கப்படவுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மூன்று நாட்களும் மாலை சுமார் 3 மணி முதல் வல்வை அம்பாள் வெதுப்பகத்தினரால் இவ் உணவு வினையோகம் நடைபெறவுள்ளதாக திரு. மாதவன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here