இனங்களுக்கு இடையில் நல்லுறவைப் பலப்படுத்த வடமராட்சியைச் சேர்ந்த 4பேர் நேற்று முன்தினம் தமது பயணத்தை 17 நாட்களின் பின் நிறைவு செய்தனர்.
வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்த பி.பிரகாஸ், இலகடியைச் சேர்ந்தவர்களான கு.நிசாந்தன் , இ.நிசாந்தன் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த ஸ்ரீ.செல்வராஜ் ஆகிய நான்கு இளைஞர்களுமே இவ்வாறு இனங்களுக்கு இடையிலான நல்லுறவை வலியுறுத்தி துவிச்சக்கர வண்டி பயணத்தை மேற்கொண்டவர்களாவார்.
கடந்த 09 ஆம் திகதி வல்வெட்டி – இலகடிச்சந்தியில் இருந்து ஆரம்பமான துவிச்சக்கர வண்டிப்பயணம் கிளிநொச்சி, மதவாச்சி, சிலாபம், நீர்கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை அடங்கலாக 17 நாட்களாக தொடர்ந்து சுமார் 1500 கிலோ மீற்றர் தூரத்தை பயணம் செய்து நேற்று முன்தினம் தம் பயணத்தை ஆரம்பித்த இடத்தில் நிறைவு செய்தனர்.









