வல்வை வி.கழகத்தின் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது வல்வை சைனிங்ஸ் அணி

0
586 views

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்திய வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் கிண்ணத்தை சைனிங்ஸ் அணி கைப்பற்றியது.

அரையிறுதியில் நேதாஜி அணியை வெற்றி கொண்டு நேற்றைய தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் றெயின்போ அணியுடன் மோதியது. போட்டியின் முற்பாதியில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பெறவில்லை. இரண்டாம் பாதியிலும் கோல் போடும் வாய்ப்புக்கள் இரு அணியினதும் பின்கள வீரர்களினால் முறியடிக்கப்பட ஆட்டம் 0:0 என சமனிலையில் முடிவடைந்தது.

வெற்றியைத் தீர்மானிப்பதற்கான சமனிலை தவிர்ப்பு உதையில் அபிநயனின் சாதுரியமான கோல்காப்பும், வீரர்களின் சிறப்பான உதைகளின் மூலமாகவும் சைனிங்ஸ் அணி 4 : 3 என வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றது. 1 கோலினால் வெற்றி வாய்ப்பபை தவற விட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றது றெயின்போ அணி.

இறுதிப்போட்டி ஆட்டநாயகனாக சைனிங்ஸ் கழக வீரன் செந்தூரனும் , தொடரின் சிறந்த விளையாட்டு வீரனாக சைனிங்ஸ் கழக வீரன் பிரசாந்தும், தொடரின் சிறந்த கோல்காப்பாளராக சைனிங்ஸ் கழக வீரன் அபிநயனும், தொடரின் சிறந்த பின்கள வீரனாக றெயின்போ கழக வீரன் பிரகாஷ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

சமனிலை தவிர்ப்பு உதையில் பிரசாந், துளசிராம், செந்தூரன், சுரேன் தலா 1 கோல்கள் வீதம் பெற்றுக் கொடுத்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here