வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் நடாத்தும் பெருவிளையாட்டுத் தொடரின் மென்பந்தாட்டப் போட்டி இன்று காலை கழுகுகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தீருவில் விளையாட்டுக் கழகத்துடன் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்து 44 ஓட்டங்களை தீருவில் வி.க பெற்றது.
உதயசூரியன் வீரர்கள் சிவகுமார் 2 , சிவஞானம் 1, நவீன் 1, கஜேந்திரன் 1 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து துடுப்பெடுப்பை மேற்கொண்ட உதயசூரியன் விளையாட்டுக் கழகம் சார்பாக கஜேந்திரன் 28, ஜெயகாந் 12 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
இன்றைய ஆட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறிய உதயசூரியன் விளையாட்டுக் கழகம் அரையிறுதி ஆட்டத்தில்
றெயின்போ விளையாட்டுக் கழகத்துடன் மோதவுள்ளது.








