மதிப்பிற்குரிய அமரர். திரு.தங்கவேல் முத்துக்குமாரு அவர்களுக்கு, 11.8.2013 அன்று நடைபெற்ற உதயசூரியன் கழக பொன்விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்திருந்தோம்.
Lifetime Achievement Award
Honeurable
Thangavel Muthukumaru
நீண்ட காலமாக வல்வை விளையாட்டுக்கழகத்தின் தலைவராக செயற்பட்ட தங்கப்பா போர்ச்சூழ்நிலைகளின் போது இடம்பெயர்ந்து வன்னியில் இருந்த பொழுதுகளில் கழக வீரர்களை இணைத்து “வல்வை விளையாட்டுக்கழகம்” என்ற பெயரில் வழிநடாத்தி பல வெற்றிகளை குவித்து வல்வை வி.கவின் பெயரினை வன்னியெங்கும் ஒலிக்கச்செய்ததுடன்இ 2002 ஆண்டு ஏற்பட்ட சமாதானத்தின் போது மீண்டும் வல்வை மண்ணில் குடியேறி வல்வை விளையாட்டுக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று இன்று வல்வை விளையாட்டுக் கழகத்தின் பெயர் யாழ் மாவட்டம் எங்கும் தெரிகிறது என்றால் அதற்கு பின்னால் தங்கப்பாவின் கடின உழைப்பு இருக்கிறது என்றால் மிகையாகாது. வல்வை விளையாட்டுக் கழகத்தில் மாத்திரமில்லாதுஇ வல்வெட்டித்துறையின் பல தரப்பட்ட சழூகப்பணிகளில் தன்னை இணைத்து செயற்பட்ட ஓர் சழூக சேவையாளனை வல்வை மண் இன்று இழந்து தவிக்கின்றது.
அன்னாரின் பிரிவால் வாடி நிற்கும் குடும்பத்தினருக்கு வல்வை உதயசூரியன் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம்..














