பரபரப்பான ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறின யங்கம்பன்ஸ் வி.கழகம் மற்றும் இமையாணன் மத்திய வி.கழகம்.
கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலையத்தின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்படும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகமும் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பப் இறுதிவரை பரபரப்பாக இடம் பெற்றஆட்டத்தில் பலத்த போராட்டத்தின் பின் 2:1 என்ற கோல்க்கணக்கில் யங்கம்பன்ஸ் லிளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக யங்கம்பன்ஸின் தர்சன் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து இடம்பெற்ற, இரண்டாவது ஆட்டத்தில் இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின. விறு விறுப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் இரு அணி தலா 2 கோல்களைப் போட ஆட்டம் சமனிலையில் நிறைவடைந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 3:2 கோல்கள் பெற்று இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதியாட்டதிற்கு தெரிவு செய்யப்பட்டது.









