நானே அவைத்தலைவர் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவிப்பு

0
596 views

வடக்கு மாகாண சபை நிறைவு நாளான ஒக்டோபர் 25 வரை மட்டுமல்ல அதை தாண்டிய காலத்திலும் நானே அவைத்தலைவர் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தற்போதைய மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில் டெனீஸ்வரனை நான் நீக்கியது பற்றி பிரசுரிக்காமையே ஆகும். வடமாகாணசபை சார்பாக ஆளுநர் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்டு அதை முன்வைத்து வடமாகாணசபையை கலைக்க சட்டம் இடம் கொடுக்காது என்றும் அவைத்தலைவர் தொடர்ந்து எமது பதவிக்காலம் வரையில் அவைத்தலைவராகவே இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றமை தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண அவைத் தலைவர் தனது கருத்தை மேலும் தெரிவிக்கையில் ,

அவைத் தலைவர் பதவி இருப்பது அல்ல தற்போதைய பிரச்சனை உண்மையில் தற்போதைய பிரச்சனையானது அமைச்சர் சபை சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதே பெரும் பிரச்சனை அதேநேரம் வடக்கு மாகாண சபையும் அமைச்சர் வாரியமும் ஒக்டோபர் 25ம் திகதிவரை மட்டுமே செயல்பட முடியும் ஆனால் அவைத் தலைவர் அதையும் தாண்டிய காலத்திலும் குறிப்பாக அடுத்த மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும் வரையிலும் நானே அவைத்தலைவர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here