இலங்கையின் 330 பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக்கும் தலா 200 மில்லியன் ரூபா வீதம் 66 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கு விசேட திட்டம் ஒன்று தயாரிக்கப்படுவதாக பிரதமர் செயலகம் சகல மாவட்டச் செயலகங்களிற்கும் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டத்திலும் உள்ள 330 பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கும் தலா 200 மில்லியன் ரூபா அபிவிருத்தி நிதியாக ஒதுக்கப்டும். அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியினை பிரதேச செயலகங்கள் அப்பகுதி அமைச்சர் , பிரதி அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏற்புடன் அபிவிருத்தி திட்டங்களை முன்கொண்டு செல்லமுடியும்.
இவ்வாறு கிடைக்கும். 200 மில்லியனில் 12 வகையான திட்டங்களே மேற்கொள்ள முடியும் எனவும் . அவ்வாறு ஒதுக்கும் நிதியில் ஒவ்வொரு வகையான திட்டங்களிலும் உச்ச பட்சமாக பயன்படுத்தக்கூடிய நிதி விபரம் என்பன தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த நிதி தொடர்பில் கிடைக்கும் நிதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களைத் தயாரிப்பதற்கான முன்னோடி வேலைகளில் மாவட்டச் செயலகங்கள் பிரதேச செயலகங்கள் என்பன மிக வேகமாக செயல்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.








