இந்து கலாச்சார பிரதியமைச்சராக இந்து மதம் சார்ந்த ஒருவர் அல்லாது வேறு மதத்தைச் சார்ந்தவர் ஒருவரை இந்து கலாச்சார அமைச்சராக நியமித்தமைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வரும் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் துர்க்கா தேவஸ்தான தலைவர் திருமுருகன் இந்து மாமன்றத்தின் செயலாளர் உட்பட்ட பிரதிநிதிகள் நேற்று (14) மாலை கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
உடனடியாக ஜனாதிபதியின் செயலாளரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கௌரவ ஆளுனர் குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாண இந்து மக்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினார் இதனை அடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதியமைச்சர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களிடமிருந்து மாற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த விடயங்களை தம்மை சந்தித்த மதத் தலைவர்களிடம் ஆளுநர் தெரிவித்தார்.