கடந்த 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்தவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் அவர்களின் குடும்பத்தாரை சிவம் அறக்கட்டளை ஸ்தாபகர் கணேஸ் வேலாயுதம் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார். குறித்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகளின் கல்வி தேவைகள் மற்றும் அவர்களின் குடும்ப நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அவர், ஆனந்த சுதாகரின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் அவரது குடும்பத்தாரிடம் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த சிறார்களின் கல்வி மற்றும் அவர்களின் ஏனைய தேவைகள் தொடர்பில் சிவம் அறக்கட்டளை ஊடாக முன்னெடுத்து செல்வதற்கு ஏற்கனவே குடும்பத்தாருக்கு குறிப்பிட்டிருந்த நிலையில், ஆனந்த சுதாகரின் விடுதலைக்காக பல்வேறு பட்ட தரப்பினர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளும் அதே வேளை, மேன்முறையீட்டின் மூலம் ஆனந்த சுதாகரை அவரது பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உறவினருடன் இணைந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அறக்கட்டளை ஊடாக முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.இந்நிலையில் கடந்த புதன்கிழமை குறித்த வீட்டாரை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.