வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் கால்கோள் விழா

0
1,227 views

வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் கால்கோள் விழா இன்று 22.03.2021 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது.

உபதலைவர் திரு.க.சுரேந்திரதாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய இந் நிகழ்விற்கு வல்வெட்டித்துறை நகரசபையின் தற்போதைய செயலாளர் திருமதி நி.தர்சினி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

பாலர்களின் கலைநிகழ்வுளும் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கான பரிசு வழங்கல்களும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தால் தரம் 5 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களிற்காக கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்களில் பங்கு பற்றி, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஐந்து மாணவர்களிற்கும் உதயசூரியன் கழக லண்டன் நிர்வாகத்தினரின் அனுசரணையுடன்  தலா 10,000 ரூபா வீதம் ஐம்பதாயிரம் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதுடன் அவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி கௌரவிக்கபட்டது.

புகைப்படங்கள் – வே.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here