நேற்று அதிகாலை 1 மணியளவில் இமையாணன் பகுதியிலுள்ள ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான சி.நவரத்தினம் என்பவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்து திருட முயற்சிக்கையில் வீட்டில் உள்ளவர்கள் விழிப்படைந்து திருடர்களை மடக்கி பிடிக்க முயற்சித்த போது அவர்களை சரமாரியhகத்தாக்கி காயப்படுத்தி விட்டு கையில் அகப்பட்ட ஒரு சோடி காப்புடன் தப்பிச் சென்றது.
திருடர்களின் தாக்குதலில் வீட்டு உரிமையாரான சி.நவரத்தினம் அவரது மருமகனான உ.ரகுபதி ஆகிய இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மந்திகை ஆதாரnவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்று முன் தினம் இமையாணன் மேற்குப் பகுதியில் பட்டப் பகலில் 4 பேர் கொண்ட திருட்டுக் குழுவொன்று மடக்கி பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.