இலட்சியத்துக்காக தியாகங்களையும் நெஞ்சங்களிலே சுமந்து த.தே.ம.முன்னணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.!

0
701 views

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று புதன்கிழமை (21.03.2018) மாலை 4 மணியளவில் தியாகி திலீபனின் நினைவுத் தூபிமுன் இடம்பெற்ற வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் ஈகைச்சுடரினை மாவீரர் குலேந்திரனின் புதல்வியான நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் குலேந்திரன் பிருந்தா ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மாவீரர் நினைவுக் கல்லறைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பளர் வி.மணிவண்ணன் மலர்மாலை அணிவித்தார்.

அதன்போது மாமனிதர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து தேசிய அமைப்பளர் வி.மணிவண்ணன் முன்னிலையில் சத்திய இலட்சியத்துக்காக தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எம் உறவுகளையும் அவர்களின் தியாகங்களையும் நெஞ்சங்களிலே சுமந்து உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here