முத்தரப்பு கிரிக்கெட் கடைசி லீக்கில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி தோல்வி அடைந்தது…

0
400 views

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 15 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு முடிவில்லை) இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இங்கிலாந்து 5 புள்ளிகளுடன் 2– வது இடத்திலும், இந்தியா 2 புள்ளியுடன் கடைசி இடத்திலும் இருந்தது. முத்தரப்பு தொடர், பெர்த்தில் இன்று நடைபெற்ற கடைசி லீக்கில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்ற நிலையிலே ஆட்டம் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது. ரெகானே, ஷிகர் தவான் தொடக்கத்தில் நன்றாக விளையாடி ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இந்திய அணியின் பேட்டிங் இல்லை. இந்திய அணி 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அணியில் பேட்டிங்கில் மிகவும் சொதப்பலாகவே இருந்தது.

இந்தியஅணி நிர்ணயம் செய்த வெற்றி இலக்கான 201 ரன்களை பெற இங்கிலாந்து அணி நேர்த்தியான ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணி பந்து வீச்சாளர்களின் அதிரடி இங்கிலாந்து வீரர்களை சற்று கதிகலங்க செய்தது. இங்கிலாந்து அணி வெற்றும் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 5 விக்கெட்களை பறிகொடுத்தது. இதனையடுத்து இந்தியா வெற்றிபெறும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்திலே முடிந்தது. இங்கிலாந்து அணியின் வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேம்ஸ் டெய்லர் தங்களது நேர்த்தியான ஆட்டம் மூலம் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டு சென்றார். பவர் பிளே 36-வது ஓவர் தொடங்கும் போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் என்ற கணக்கில் வெற்றியின் பாதையை அடைந்திருந்தது. இங்கிலாந்து அணி 46.5 ஓவர்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது 201 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணி, இந்தியா நிர்ணயம் செய்த வெற்றியிலக்கை தகர்த்தது. டெய்லர் 82 ரன்னிலும், பட்லர் 67 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இறுதியில் வோக்ஸ் 4 ரன்னிலும், பிராட் 3 ரன்களிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்ட இங்கிலாந்து அணி இறுதிப; போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் பின்னி அதிகப்பட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here