சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மறைந்த சைனிங்ஸ் மூத்த உறுப்பினர் வைத்தியப்பா ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் மற்றும் First Fresh Food LTD (London) இன் அனுசரணையுடன் வல்வைக்குட்பட்ட அணிகளிடையே நடாத்தும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி
(21/08/2025) இடம்பெற்ற இறுதியாட்டத்தில் #இளங்கதிர் அணியினை எதிர்த்து #உதயசூரியன் அணியானது மோதியது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடந்த இவ் இறுதியாட்டமானது ஆட்டநேர முடிவில் எவ்வித கோல்களையும் பெறாத நிலையில் சமனிலையில் முடிவடைந்தது. எனவே வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் உதயசூரியன் அணியானது 3:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.













































