சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி: மும்பைக்கு மரண ‘அடி’

0
299 views

மும்பை:
மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் விளாசல் கைகொடுக்க, சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. சொந்த மண்ணில் சோபிக்கத்தவறிய மும்பை அணி, தொடர்ந்து நான்காவது தோல்வியை பெற்றது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல்., தொடருக்கான 12வது லீக் போட்டியில், மும்பை, சென்னை அணிகள் மோதின.‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

சூதிணறல் துவக்கம்:
மும்பை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆஷிஸ் நெஹ்ரா வீசிய முதல் ஓவரில் பார்த்திவ் படேல் ‘டக்–அவுட்’ ஆனார். அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் (4), நெஹ்ராவிடம் சரணடைந்தார். ஈஷ்வர் பாண்டே ‘வேகத்தில்’ சிம்மன்ஸ் (5) வெளியேற, 12 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

சூரோகித் நம்பிக்கை:
மோகித் சர்மா பந்தில் ஹர்பஜன் (24) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய ரோகித், அரைசதம் அடித்து நம்பிக்கை தந்தார். ஐடேஜா வீசிய 14வது ஓவரில், போலார்டு அதிரடி காட்ட, 3 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 26 ரன்கள் கிடைத்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த போது, மோகித் சர்மா பந்தில் ரோகித் (50) ‘பெவிலியன்’ திரும்பினார். அபாரமாக ஆடிய போலார்டு, 21 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.

சூ‘ஹாட்ரிக்’ நழுவல்:
கடைசி ஓவரை வீசிய டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு (29), போலார்டு (64) ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கி இரட்டை ‘அடி’ கொடுத்தார். கடைசி பந்தை வினய் குமார் தடுத்தாட, பிராவோவின் ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. மும்பை அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது.

சூ‘சூப்பர்’ துவக்கம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இவர்கள், மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். மலிங்கா வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த மெக்கலம், ஹர்பஜன் சிங் வீசிய 6வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். மறுமுனையில் அசத்திய ஸ்மித், சுசித் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் எடுத்தார். ஹர்பஜன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்மித், 22 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். ஆட்டத்தின் 8வது ஓவரை வீசிய ஹர்பஜன் சிங் திருப்பம் தந்தார். முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்த நிலையில், 2வது பந்தில் மெக்கலம் (46) அவுட்டாக, 6வது பந்தில் ஸ்மித் (62 ரன், 4 சிக்சர், 8 பவுண்டரி) வெளியேறினார். அடுத்து வந்த டுபிளசி (11) நிலைக்கவில்லை. போலார்டு பந்தில் கேப்டன் தோனி (3) சிக்கினார்.
கடந்த இரு போட்டிகளிலும் தடுமாறிய ரெய்னா இன்று சிக்சர்களாக விளாசினார். போலார்டு பந்தை சிக்சருக்கு அனுப்பிய டுவைன் பிராவோ வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி 16.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. ரெய்னா (43), பிராவோ (13) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை சென்னை அணியின் நெஹ்ரா(3 விக்.இ) வென்றார்.

சூமுதல் ‘மெய்டன்’:
ஆட்டத்தின் 2வது ஓவரை அருமையாக வீசிய ஈஷ்வர் பாண்டே, ஒரு ரன் கூட வழங்கவில்லை. இதன் மூலம் 8வது ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணி சார்பில் ‘மெய்டன் ஓவர்’ வீசிய முதல் பவுலர் என்ற பெருமை பெற்றார்.

சூ150:
எட்டாவது ஐ.பி.எல். தொடரில் 150வது சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை மும்பை அணியின் போலார்டு பெற்றார்.

சூ21:
அபாரமாக ஆடிய போலார்டு 21 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிவேக அரைசதமடித்த மும்பை வீரர்கள் பட்டியலில், இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஹர்பஜன் சிங் (19 பந்து, எதிர்–பஞ்சாப், 2015) உள்ளார்.

சூ90:

பேட்டிங்கில் அசத்திய சென்னை அணி, முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் ‘பவர் பிளே’ ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது. முதலிடத்தில் சென்னை அணி (100 ரன்இ எதிர்–பஞ்சாப், 2014) உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here