இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கிரேக் கீஸ்வெட்டர் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் சாமர்செட் அணிக்காக விளையாடி வரும் கீஸ்வெட்டர் நார்த்தாம்டன் அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டியில் விளையாடினார்.
இப்போட்டியில் இவர் 14 ஓட்டங்களை பெற்றிருந்த போது 24 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.ஜே வில்லேயின் பவுன்சரை புல் ஷாட் ஆட முற்பட்டர். ஆனால் பந்து எதிர்பாத்ததை விட சற்று அதிகமாக மேலெலுந்து அவரின் ஹெல்மெட்டிற்கள் நுழைந்து அவரின் மூக்கை பதம் பாத்தது. பந்து பலமாக தாக்கியதால் வலது கண்ணிற்கு கீழும் மூக்குகிலும் பலத்த காயமடைந்த கீஸ்வெட்டர் இரத்தம் சொட்டச் சொட்ட மைதானத்துனுள் வீழ்ந்தார்.
அவரின் முகத்தில் எழும்பு முறிவு எற்பட்டது. மூக்கு மற்றும் கண்ணிலும் பலத்த அடி. ஆனார் அவரின் கண்ணிற்க பெரிதாக பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தள்ளனர். இதனைத் தொடர்ந்தே கீஸ்வெட்டர் ஓய்வு முடிவுக்கு வந்துள்ளார்.
இது தொடர்பாக கீஸ்வெட்டர் கூறுகையில், “அதிரடி பேட்ஸ்மேனாக இனிமேல் விளையாட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துவிட்டேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை த்ரில்லான ஒரு வாழ்க்கையாக அமைந்தது. ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் கிரிக்கெட்டில் இருந்தில் ஓய்வு பெறுவது குறித்து எந்த வருத்தமும் எனக்கு இல்லை” என்றார்.
இங்கிலாந்து அணிக்காக கீஸ்வெட்டர் 46 ஒருநாள் போட்டிகளிலும், 25 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இங்கிலாந்து அணி வென்ற ஒரே ஒரு உலகக் கிண்ணத்தின் (2010ஆம் ஆண்டுமேற்கிந்திய தீவில் நடந்த உலகக் கோப்பை டி 20 போட்டி) தொடர் நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் (ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக) ஆட்டநாயகனான தெரிவுசெய்யப்பட்ட பெருமைக்குறியவர்.