புதிய தேசியக்கொடிக்கான போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார் சிவாஜிலிங்கம்!
தேதிய தேசியக்கொடி ஒன்றை கொண்டு வருவதற்காக போராடவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பின் ஊடாக புதிய தேசியக்கொடி ஒன்றினை அறிமுகப்படுத்தினால் நாட்டிற்குள் பிரச்சினைகள் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு நாட்டினது தேசியக்கொடியானது சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக அமையவேண்டும் என்றும்,தற்போது உள்ள தேசியக்கொடியானது சிங்கள இனத்தையும்,பௌத்த மத்ததையும் மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளதாகவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.