ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 17 ஆண்டுகள் கழித்து இந்திய பெண் உலகி அழகி பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில் இவர் குறித்து கூகுளில் பலரும் தேடி உள்ளனர். இதனால் கூகுள் தேடலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். 

ஆசியவில் அதிகமாக தேடப்படும் பெண் பிரபலம் சன்னி லியோனை ஒரே நாளில் வீழ்த்திவிட்டார் மனுஷி சில்லார். நேற்று கூகுள் தேடலில் இவர் குறித்து அதிகமாக தேடப்பட்டுள்ளது. மேலும் பலர் இவர் குறித்து வித்தியாசமான தேடலிலும் ஈடுபட்டது வேதனை அளித்துள்ளது.
அதில் குறிப்பாக சிலர் மனுஷி சில்லார் என்ன ஜாதி என தேடியுள்ளனர். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரே நாளில் பல லட்சம் பேர் பின் தொடர்ந்துள்ளனர். இவர் கண்டிப்பாக பாலிவுட் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு, கடந்த 1966-ஆம் ஆண்டில் இந்தியாவின் ரீட்டா ஃபரியா உலக அழகிப் பட்டத்தை வென்றார். அதன்பிறகு ஐஸ்வர்யா ராய் 1994-ம் ஆண்டும், டயானா ஹேடன் 1997-ம் ஆண்டும், 2000-ம் ஆண்டு பிரியங்கா சோப்ராவும் இப்பட்டத்தை வென்றுள்ளனர்