சந்நிதி ஆலய தேர்த் திருவிழாவில் திருடுவதற்காக வந்தவர்கள் என்னும் சந்தேகத்தின் பேரில் வாகனச் சாரதி உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து ஹைஏ எஸ் வாகனம் மூலம் வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காங்கேசன் துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் குறித்த ஐவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் தங்களை அடையாளப்படுத்துவதற்குரிய ஆவணங்கள் மற்றும் வாகனத்துக்குரிய ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சந்தேகத்துக்கு இடமான இரு வாகனங்களும் தேடப்படுவருவதாகவும் இவர்கள் வந்த வாகனத்தை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.