நெதர்லாந்து நாட்டில் தமிழர் ஒருங்கிணைப்புகுழு ஆதரவில் தழிழர் விளையாட்டுதுறை ஒன்றியம் நடாத்திய ஆனந்தபுரம் நாயகர்கள் நினைவு சுமந்த உதைபந்தாட்டபோட்டியில் சுவீஸ் தெரிவு அணி(selected) முதலாம் இடத்தையும்
நெதர்லாந்து YMTA அணி இரண்டாம் இடத்தையும்
பிரான்சு வல்வை புளூஸ் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
கால் இறுதிப்போட்டியில் லண்டன் தெரிவு (selected) அணியை எதிர்கொண்ட வல்வை புளூஸ் பிரான்சு அணி 1 – 0 என்ற வீதத்தில் வெற்றிபெற்று அரைஇறுதியாட்டத்தில் சுவீஸ் தெரிவு அணியிடம் தோல்வியடைந்தது.
மூன்றாம் இடத்திற்கானபோட்டியில் நெதர்லாந்து அணியை வெற்றிகொண்டு மூன்றாம் இடத்தை பிரான்சு வல்வை புளூஸ் பெற்றுக்கொண்டது டென்மார்க் selected அணியும் பிரான்சு selected அணியும் காலிறுதி சுற்றுகுள்
நுழையமுடியாமல் போனது துரதிஸ்டவசமே.