வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் யாழ்ப்பாணத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 09 மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வருகைதருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
பெளத்த பிக்கு ஒருவரை அவதூறாக பேசினார் என்ற குற்றச்சாட்டில் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம், விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்து ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினர் கொழும்பிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
எனினும் தன்னால் கொழும்புக்கு வரமுடியாது என்று குறிப்பிட்ட மாகாணசபை உறுப்பினர், விசாரணை நடத்த வேண்டுமாயின் யாழ்ப்பாணத்திற்கு வந்து விசாரணை நடத்துங்கள் என்று பதிலளித்திருந்தார்.
இதற்கமைய இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வடமாகாண சபை உறுப்பினர்களான சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை, மற்றும் ம.தியாராஜா ஆகியோரும் இன்றைய தினம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.