உலக வங்கியின் நிதியுதவியுடன் மாகாண மற்றும் வலயங்களுக்கென கொள்வனவு செய்யப்பட்ட பிக் ரக வாகனங்கள் முதலமைச்சரால் நேற்று முன்தினம் வடமாகாண முதலமைச்சரால் உத்தியேகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
நேற்று முன்தினம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 10 ஆவது தடகள விளையாட்டு நிகழ்வின் இறுதிப்போட்டிகளில் கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வடமாகாணக்கல்வித்திணைக்களத்ணிற்கான வாகனத்தை மாகாண கல்விப்பணிப்பாளர் சி.உதயகுமாரிடம் கையளித்தார்.
வலிகாமம் வலயத்திற்குகான வாகனம் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சந்திரராசாவிடம் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.சர்வேஸ்வரனாலும் ,வடமராட்சிக்ஙான வாகனத்தை பதில் கல்விப்பணிப்பாளர் இ.தமிழ்மாறனிடம் ,வடமாகாண புனர்வாழ்வு மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரனும், தீவகத்திற்கான வாகனத்தை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ் .சுந்தரசிவத்திடமும் வடமாகாண சபை உறுப்பினர எம்.கே சிவாஜிலிங்கமும் கிளிநொச்சி வலயத்திற்கின வாகனத்தை வடமாகாண சபை உறுப்பினர் எஸ் கஜதீபனும் கையளித்தனர்.