வடமாகாண தடகள விளையாட்டு நிகழ்வில் 14 வயதுப் பிரிவில் பங்குபற்றி உடுப்பிட்டி அ.மி கல்லூரியைச்சேர்ந்த செ .செந்தீஸ் மூன்று நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.
கடந்த 5 தினங்களாக துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் 100 மீற்றர் ஓட்டத்தை 12.9 செக்கன்களில் ஓடி வர்ணச்சான்றிதழுடன் தங்கப்பதக்கத்தையும், நீளம்பாய்தலில் 5.51 மீற்றர் தூரம் பாய்ந்து வர்ணச்சான்றிதழுடன் தங்கப்பதக்கத்தையும்,80 மீற்றர் ஓட்டதை 10 4 செக்கன்களில் ஓடி முடித்து வர்ணச்சான்றிதழுடன் தங்கப்பதக்கச்தையும் பெற்றுக்கொண்டார்.