வல்வை விளையாட்டுக்கழகத்தினால் 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட “வல்வை பொன் விழா மலர்” இன் ஆங்கில மொழிப் பிரதி வெளியிடப்பட்டது. வல்வை விளையாட்டுக்கழகத்தின் முன்னால் தலைவர் திரு.மு.தங்கவேல் வெளியிடஇ முன்னால் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாண சபை உறுப்பினருமான திரு ஆ.மு.சிவாஜிலிங்கம் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து வருகை தந்த விருந்தினர்கள் பிரதிகளை பெற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து வல்வை விளையாட்டுக்கழகத்தில் அங்கம் வகிக்கும் ஏழு கழகங்களும் தங்களுக்கானபிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
வல்வை புளுசின் பொன் விழா மலர் ஆங்கிலப் பதிப்பை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள்இ வல்வெட்டித்துறையில் திரு. மு.தங்கவேல் அவர்களையும்இ இங்கிலாந்தில் திரு. செ.பிருதுவிராஜன் (07402702357) அவர்களையும் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளாம். இந்த இரண்டு மலர்களும் (தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பு) இன்னும் சில நாட்களில் வல்வெட்டித்துறையின் இனையத்தளங்களில் பார்வையிடலாம்.
பொன் விழாமலர் வெளியீட்டின் இறுதிக் கையிருப்பான இரண்டுலெச்சத்தி பன்னிரெண்டாயிரம் ரூபா பொன் விழாமலர் குழுவினரால் வல்வை விளையாட்டு கழகத்திடம் கையளிக்கப்பட்டது.