சைனிங்ஸ் சுழல் கிண்ண உதைபந்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் கைப்பற்றி வரலாற்றுச்சாதனை படைத்தது இளங்கதிர் அணி

0
360 views

சைனிங்ஸ் சுழல் கிண்ண உதைபந்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் கைப்பற்றி வரலாற்றுச்சாதனை படைத்தது இளங்கதிர் அணி

LONDON FIRST FRESH FOOD LTD இன் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக 3 வது வருடம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் நாளை இடம்பெறும் இறுதியாட்டத்தில் நேதாஜி அணியினை எதிர்த்து இளங்கதிர் அணியானது மோதியது.. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எந்தவித கோல்களும் பதிவு செய்யப்படவில்லை… எனவே வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட தண்ட உதையில் 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது… இப்போட்டியின் ஆட்டநாயகனாக இளங்கதிர் அணியின் பிரசாந் இ இச்சுற்றுத்தொடரின் தொடராட்டநாயகனாக அதே அணியைச்சேர்ந்த மதுசாந் மற்றும் சிறந்த கோல்காப்பாளராக நேதாஜி அணியின் ஜிவிந்தனும் தெரிவு செய்யப்பட்டனர் …
மேலும் அதற்கு முன்னதாக இடம்பெற்ற மென்பந்தாட்ட இறுதிப்போட்டியில் தீருவில் விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்ட இளங்கதிர் அணியானது 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.. இப்போட்டியின் ஆட்டநாயகனாக தீருவில் அணியைச்சேர்ந்த மயூரனும் தொடராட்டநாயகனாக அதே அணியைச்சேர்ந்த பிரதீப்பும் தெரிவு செய்யப்பட்டனர் …
சுழல்கிண்ண உதைபந்தாட்டத்தை பொறுத்தவரையில் வல்வைக்குள் எந்த அணியும் தொடர்ச்சியாக மூன்று முறை கைப்பற்றியதில்லை.. இளங்கதிர் அணியானது தொடர்ச்சியாக மூன்று முறை கைப்பற்றி வரலாற்றுச்சாதனை படைத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here