தென்மராட்சி கல்வி வலயத்தின் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வர்ண இரவுகள் வீருது வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. வலயக் கல்விப்பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒலிம்பியன் என். எதிர்வீரசிங்கம் வடமாகாண பிரதிக்கல்விப்பணிப்பாளர் கே. சத்தியபாலன் வடமாகாண ஆளுநரின் செயலாளர் ஈ.இளங்கோவன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எஸ் அரியரட்ணம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வலயமட்டம் மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டங்களில் சாதனைபடைத்த விளையாட்டு வீர வீராங்கனைகள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.














