வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

0
579 views

கரவெட்டிப்பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 508 மாணவர்களுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் கரவெட்டிப்பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டன.
வாழ்வெழிச்சிச்சித திட்டத்தின் கீழ் சிசுதிரிய புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் உத்தியோகத்தர் நிகழ்வும் நேற்று முன்தியம் கரணவாய் மூத்திவிநாயகர் ஆலய திருமண மண்டப்பத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலயத்துக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கரவெட்டிப்பிரதேச செயலர் பிரிவைச்சேர்ந்த தெரிவு செய்ய்ப்பட்ட மாணவர்கள் 508 பேருக்கே இந்த உதவிக் கொடுபப்னவுகள் வழங்கப்பட்டன.


அத்துடன் மீள்குடியேற்றப் புனரமைப்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட 20.9மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகளும் இந்நிகழ்வில் வைத்து வழங்க்பட்டன.
இந்தவகையில் 280 குடும்பங்களிற்கு தையல் இயந்திரங்களும் 88 குடும்பங்களுக்கு ஆடு மாடு போன்ற கால் நடைகளும் வழங்கப்பட்டதுடன் மேசன் சைக்கிள் திருத்துதல் தச்சுத் தொழில் விவாசாயத் தொழில் மற்றும் உணவு உற்பத்தித் தொழில் ஆகியவற்றிற்குப்பயன்படுத்தப்படும் பொருட்களும் வழங்கப்பட்டன. குறிப்பாக புனர்வாழ்வு பெற்று குடம்பங்களுடன் இணைந்த வாழும் முன்னாள் பொராளிகளுக்கும் முன்னுரிமைப்படுத்தி இப்பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதது.
கரவெட்டிப்பிரதேச செயலர் ச.சிவஶ்ரீ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இப்பொருட்களை இந்நிகழ்வில் பரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயகன் வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் சி. நந்தகுமார் மற்றும் வாழ்வெழுச்சி அபிவிருத்தித் திணைக்கள யாழ் மாவட்ப்பணிப்பாளர் க. மகேஸ்வரன் சரவெட்டிப்பிரதேச செயலக உதவித்திட்டமிடற்பணிப்பாளர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.இந்நிகழ்வில் பயனாளிகள் பிரதேச செயலக அதிகாரிகள் எனப்பலரும் கரந்து கொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here