நோர்வேயில் இலங்கை தமிழர்கள், இங்கு வாழும் வேறு பல தமிழர்களின் அடையாளத்தை பயன்படுத்தி மேற்கொண்ட பாரிய மோசடி குறித்து கைதுசெய்யப்பட்ட 76 பேர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பமாகவுள்ளது.
விசாரணை செய்யும் போலீஸ் மற்றும் வருமானவரி அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்த செய்தியாளர் மாநாட்டில்
இந்த மோசடியில் முக்கிய சூத்திரதாரி என்று கருதப்படும் 34 வயது நபர் சிலமாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். துப்புரவு தொழில் செய்யும் கடும் உழைப்பாளியாக இருந்து வாழ்க்கையில் முன்னேறிவரும் ஒருவராக தன்னை அடையாளம்காட்டிவந்த இவர் மேலும் 6 பேருடன் இணைத்து பலநூறு இலங்கை தமிழர்களின் அடையாள எண்கள் மற்றும் பெயர்களை பயன்படுத்தி 160-200 கோடி ருபாய் வரையில் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் மோசடி செய்துள்ளனர்.
இந்த தொகை இதனை விட பலமடங்கு அதிகமாக இருக்கலாம் என்று இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தேடுவது சிரமமான காரியம், என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்துக்கு போலியான கணக்கு காட்டுதல், வங்கிகளில் அடுத்தவரின் பெயரில் கோடிக்கணக்கில் கடன் பெறுதல், போலி நிறுவனங்களை உருவாக்கி கடன் பெறுதல், போலியான ஆவணங்கள் மூலம் ஒருவரது வருமானத்தை அதிகரித்து காட்டி அவரின் பெயரில் புதிய நிறுவனங்களை நிறுவி கடன் மற்றும் க்ரெடிட் பெருதல் என்று ஆரம்பித்து பல்வேறு கோணங்களில் தொடரும் இந்த மோசடியை விசாரித்த போலீசார் மலைத்து போகும் அளவு இதன் வேர் நீண்டுள்ளது.
பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்படும்போது
சில தமிழ் இளைஞ்சர்கள் இங்கு வேலை செய்வதற்கு முறையான ஆவணங்களோ போதிய வேலை வாய்ப்போ இல்லாததால் இந்த மோசடிக்குழுவின் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து ஆள்மாறாட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தப்பட்டு தற்போது கைதுசெய்ய பட்டுள்ளனர். வேறு சிலர் தங்கள் அடையாள எங்களையும் விபரங்களையும் தாமாகவே பணத்துக்காக இந்த குழுவுக்கு கொடுத்துள்ளனர்
துப்புரவு தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தும் ஸ்கெட்ஸ்மோ (தலைநகர் ஒஸ்லோவில் அருகில் ) வசிக்கும் இலங்கையர் ஒருவரின் வருமானம், வாழ்க்கை முறை குறித்து 2014 ஆம் ஆண்டு வருமான வரி திணைக்களத்தால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஒரு தகவலில், இலங்கை தமிழர்கள் சிலரின் நடவடிக்கைகள் மீது சிறிய சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளாக போலீசார் உளவுத்துறை, சுங்க அதிகாரிகள் என்று பல அரச நிறுவனங்கள் கூட்டாக இவர்களை கண்காணித்ததில் முக்கிய 6 நபர்கள் மேலும் பல தமிழர்களின் பெயரில் இவ்வாறு மோசடிகளை செய்து சொகுசாக வாழ்வதும் இதன் பின்னல் உள்ள பாரதூரமான களவும் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் ஒருபகுதி
6 கோடி ரூபா பெறுமதியான தனது ஆஸ்டன் மாட்டின் காருடன் பிரதான சந்தேக நபர், சில ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூர் பத்திரிகையில் முதற்பக்கத்தில் வந்து, உழைப்பால் உயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு உதாரணமாக தன்னை பெருமையுடன் அடையாளப்படுத்தி இருந்தார்.
முக்கிய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ளனர். மேலும் பலர் விசாரணைகளை எதிநோக்கி உள்ளனர்.
குறைந்த பட்சம் 7 இளஞ்சர்கள் இந்த சம்பவத்தை அடுத்து தமது தற்காலிக வேலை அனுமதியை இழந்துள்ளனர். புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் முன்னர் இந்த மோசடி நிறுவனங்களில் வேலைசெய்த பலரது அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ன.
பொதுவாக நோர்வேஜியர்கள் மத்தியில் இலங்கையர்கள் மீது ஒரு நல்லபிப்ராயம் இருந்து வரும் நிலையில் இந்த சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. தேசிய நாளிதல்கள் பக்கம் பக்கமாக இது குறித்து எழுதுகின்றன